ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை.
"இனிமே நீ வேலைக்கு போலாம்."
அமெரிக்காவில் பிரபலமாகி வரும் 'மிஸ்டர். மாம்' கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு நேராக சமாளிப்பதென முடிவுக்கு வந்து விட்டான். ஜெனிலியாவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை எனினும், ஜேம்சிற்கு ஜான்சனுடன் பொழுது நன்றாக போனது. வீட்டு வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களிலயே பழகி விட்டது. மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் மருத்துவ ஆலோசனைக்கு ஜான்சனை அழைத்து சென்றான் ஜேம்ஸ்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் இருந்து ஜெனிலியாவை தொடர்புக் கொண்டனர். ஜான்சனுக்கு தான் ஏதோ ஆபத்து போலிருக்கு என பதற்றத்துடன் மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள் ஜெனிலியா. மருத்துவர் சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, "பதட்டப்படாம சொல்றத கேளுங்க. உங்க புருஷன் 'நெக்ரோபிலியா(Necrophilia)'வால பாதிக்கப்பட்டிருக்கார்" என்றார்.
"அப்படின்னா?" என்றாள் பயந்தவாறே.
"ம்ம்...அது ஒரு வகையான மன நோய். செத்தவங்க மேல ஏற்படற ஆசை. இன்னும் தெளிவா சொல்லனும்னா பிரேதத்தோட உறவு வச்சிப்பாங்க."
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு எழுந்தாள் ஜெனிலியா.
"அவசரப்படாதீங்க. எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு" என தனது கணினி திரையினை ஜெனிலியா பக்கம் திருப்பிய மருத்துவர் "இது மார்ச்சுவரியில இருக்கும் கேமராவுல பதிவாயிருக்கு" என்றார்.
ஜெனிலியாவிற்கு அழுகையாய் வந்தது. கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்தப்படியே, "எதுவும் பண்ண முடியாதா?" என்று கேட்டாள்.
"இது ரொம்ப ரொம்ப ரேரான கேஸ். ட்ரை பண்ணலாமே தவிர முடிவ பத்தி சொல்ல முடியாது. நீங்க டைவர்ஸ் அப்ளை பண்ணீங்கன்னா நான் உங்களுக்கு ஃபேவரா ரிப்போர்ட் தர்றேன்."
"வேற வழி இல்லையா?"
"ஏன் உளர்ற? முதல்ல உட்காரு. இதெல்லாம் நான் ஈஜிப்ட் கதைல தான் கேட்டிருக்கேன். போயும் போயும் ஜேம்ஸ பண்ணுவானா இந்த வேலைய. லூசு, உட்காருன்னு சொல்றேனில்ல."
"எனக்கு பயமா இருக்கு."
"ஏன் அநாவசியமா பயப்படுற?"
"ஏன் நெக்ரோபிலியா வருது தெரியுமா? செத்தவங்க மேல பயம் இருந்தா அது வரும். ஜேம்சுக்கு இந்த பயம் சின்ன வயசுல இருந்தே இருக்குன்னு அவனே சொல்லியிருக்கான். உன்னால எனக்கு டைவர்ஸ் வாங்கி தர முடியுமா முடியாதா ஜூலி" என்று கோபமாக கேட்டாள் ஜெனிலியா.
"சரி, அவசரப்படாத. சொல்றத நல்லா கேளு. ஜேம்சுக்கு எதுவும் தெரிய வேணாம். எனக்கு ஒரு வாரம் டைம் கொடு. அப்பறமா நோட்டீஸ் அனுப்புவோம்."
"அவன் என் மேலயும், ஜான்சன் மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கான் தெரியுமா?" என்று அழுதாள் ஜெனிலியா.
"அப்ப டைவர்ஸ் வேணாம் இல்ல?"
"ம்கூம்..வேணும்."
ஜெனிலியாவிடம் பேசிய அந்த டாக்டரை கைது செய்து விட்டனர். அதற்கு காரணம் அட்வகேட் ஜூலி தான் என செய்தி வெளியாகி இருந்தது. உடனே ஜூலியை பார்க்க சென்றாள் ஜெனிலியா.
"உன்ன தான் நான் பார்க்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சின்ன கேசா வந்துக்கிட்டிருந்தது. உன்னால நான் இப்ப ரொம்ப பிசி ஆயிட்டேன். வா மேல போய் பேசலாம்."
"என்னாச்சு?"
"அந்த டாக்டர் ஃப்ராடு. யாரு பணம் கொடுத்து என்ன செய்ய சொன்னாலும் செய்வான். அவன் மேல இப்ப ஏகப்பட்ட கேஸ். உன் விஷயத்துக்கு வருவோம். க்ரீன் மெட்டல் கம்பெனியோட 34% ஷேர் உங்க ரெண்டு பேருகிட்டயும் இருக்கு. உங்க முடிவு இல்லாம தனியா ஜேக்கப்சால எதுவும் பண்ண முடியாது. அவங்கிட்ட 28% ஷேர் தான் இருக்கு. அதனால டாக்டர் மூல்யமா உனக்கு ஜேம்ஸ் மேல வெறுப்பு வர வச்சு டைவர்ஸ் வாங்கிட்டா, உங்க ஷேர் உடைஞ்சுடும். புரியுதா?" என்றாள் ஜூலி.
ஜெனிலியாவிற்கு மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது.
"உனக்கு ஜேம்ஸ் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப சொல்லி போன வாரம் வந்திருந்தான்."
"ஏன்?" என்று அதிர்ந்தாள் ஜெனிலியா.
"உனக்கும் உங்க ஆபிசுல இருக்கிற இன்னொருத்தனுக்கும் தொடர்பு இருக்கிறதா ஒரு வீடியோ டேப் ஜேம்சுக்கு கிடைச்சிருக்கு."
"அத அவன் நம்புறானா?"
"உன் விஷயமாவது நம்புற மாதிரி இருக்கு. ஆனா நீ அவசரப்பட்ட மாதிரி நான் அவசரப்படல" என்று வாசலில் நின்று புன்னகைத்தான் ஜேம்ஸ்.
"இதுவும் அந்த ஜேக்கப்ஸ் வேலை தான்" என்றாள் ஜூலி.
ஜெனிலியா கண் கலங்கினாள். கீழே ஏதோ உடையும் சத்தம் கேட்டது.
"ஜான்சனும் வந்திருக்கார் போலிருக்கே!"
Blogged with Flock
1 கருத்து:
hmm nice .vasikka nalla irukku.nadai ippo nalla varuthu.
கருத்துரையிடுக